தமிழ் வார இதழ்களில் முதன்மை வரிசையிலுள்ள நிறுவனம் வெளியிடும் வாரமிருமுறை வெளியாகும் இதழ், 'கிரைம்' என்ற தலைப்பின் கீழ் வழமையாக சுவாரஸ்யமான செய்திகளை பதிவு செய்கிறது.
கொஞ்சம் சிந்தித்துபார்த்தால்நாம் காட்டும் 'அறிந்துகொள்ளும் ஆர்வத்தை'( curiosity)எவ்வளவு மட்ட ரகமாக உத்தேசித்து,ஊடகத்துறை வியாபாரம் செய்கிறது என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.பெரும்பாலும் பாலியல் சம்பந்தப்பட்ட வன்முறைகள், மட்டரகமான மூன்றாம் தர சிந்தனைகளைத்தூண்டும் வகையில் செய்தித்தொகுப்புகள் அதிகம் இடம் பெறுகின்றன.. (உதாரணம் : திருச்சியில் சில குடும்பப்பெண்கள் விபசாரத்திற்கு இசைவது, தரகர் உரையாடல் வடிவில்) .இதற்கு உள்ளூர் சமுக சேவகர் ஒருவரை சாட்சிக்கு வைத்துக்கொள்வது அநியாயம்.
இந்த நிறுவனம் இணைய சந்தாதாரர்களை அதிகம் கொண்டது.
"It's a breaking news" என்ற இந்திப்படம் பார்த்தபோது இந்த நிதர்சனம் உரைத்தது. வாசகனுக்கு விழிப்புணர்வு கூடுதலாக தேவை.இல்லையேல் நம்மையறியாமல் இந்த இந்த மாதிரி வக்கிர ரசனைக்கு அடிமையாகும் அபாயம் இருக்கிறது.
சனி, 28 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக