செவ்வாய், 28 ஏப்ரல், 2009

உதவிச்சங்கிலி

அப்போது நான் மும்பை நகருக்குப்புதியவன்.விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது நான் செல்லவேண்டிய இலக்கு குறித்து தேடல் வேண்டி,எனக்குத்தெரிந்த இந்தி மொழியில் சிலரிடம் வழி கேட்டேன்.அப்போது தேவசகாயம் என்ற தமிழரை சந்தித்தேன்.என் தந்தை வயதிருக்கும் அவருக்கு.என்னை ரயில் நிலையம் வரை அழைத்துச்சென்று உரிய வழிகாட்டினார்.தனக்கு அலுவல் இருப்பதாகவும்,தன்னால் எம்மோடு இலக்கு வரை வர இயலாமை குறித்தும் வருத்தம் தெரிவித்தார்.பிரதிபலன் கருதாமல் நல்லெண்ணத்தோடு உதவ முன்வரும் குணம் இறைவனின் கொடை.நிறைந்த மனதுடன் நன்றி தெரிவித்து பரஸ்பரம் வழியனுப்பிக்கொண்டோம்.
அவரிடம் கற்ற பண்பு ,இப்போதெல்லாம் வலியப்போய் தேவைப்படுவோருக்கு உதவுவதில் மனநிறைவும், இதுபோன்ற உதவி கிடைக்கப்பெறும்போது நாமோ,நமது உற்ற குடும்பத்தாரோ யாருக்கோ செய்த நல்லுதவியின் பிரதியாக இறைவன் கிருபை செய்வதாக உணர்கிறோம்.இந்த சங்கிலியில் இணைத்துக்கொள்வதில் தன்னிறைவை உணர்கிறோம், இன்ஷா அல்லாஹ்!(இறைவன் நாடினால்).நீங்களும் யோசிக்கத்தொடங்கிவிட்டீர்கள் தானே!

சனி, 25 ஏப்ரல், 2009

எங்கள் குடும்பம்


நாங்கள் ஈரோடு மாவட்டம் ,பவானி வட்டம் குந்துபாயூர் கிராமத்தில் வசிக்கிறோம்.என் தந்தையார் அப்துல்லா தாவுத் அலி - ஓய்வு பெற்ற தமிழாசிரியர்.தாய் ஹாருன் -இல்லத்தரசி.


எங்கள் கிராமம் அழகிய சிற்றூர்.இஸ்லாமிய சமுதாயத்தவர் பெரும்பான்மையாக வசிக்கிறோம்.மிக அழகிய வழிபாட்டுத்தளம் (மசூதி) செம்மண் நிலப்பரப்பில் தென்னை மரங்கள் சூழ ,சுகாதரமான தென்றல் நிறைந்த வெள்ளந்தியான மக்கள் வசிக்கும் அழகிய சிற்றூர்.

வியாழன், 23 ஏப்ரல், 2009

வணக்கம்
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு
-'தெய்வப்புலவர்' திருவள்ளுவர்.