செவ்வாய், 28 ஏப்ரல், 2009

உதவிச்சங்கிலி

அப்போது நான் மும்பை நகருக்குப்புதியவன்.விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது நான் செல்லவேண்டிய இலக்கு குறித்து தேடல் வேண்டி,எனக்குத்தெரிந்த இந்தி மொழியில் சிலரிடம் வழி கேட்டேன்.அப்போது தேவசகாயம் என்ற தமிழரை சந்தித்தேன்.என் தந்தை வயதிருக்கும் அவருக்கு.என்னை ரயில் நிலையம் வரை அழைத்துச்சென்று உரிய வழிகாட்டினார்.தனக்கு அலுவல் இருப்பதாகவும்,தன்னால் எம்மோடு இலக்கு வரை வர இயலாமை குறித்தும் வருத்தம் தெரிவித்தார்.பிரதிபலன் கருதாமல் நல்லெண்ணத்தோடு உதவ முன்வரும் குணம் இறைவனின் கொடை.நிறைந்த மனதுடன் நன்றி தெரிவித்து பரஸ்பரம் வழியனுப்பிக்கொண்டோம்.
அவரிடம் கற்ற பண்பு ,இப்போதெல்லாம் வலியப்போய் தேவைப்படுவோருக்கு உதவுவதில் மனநிறைவும், இதுபோன்ற உதவி கிடைக்கப்பெறும்போது நாமோ,நமது உற்ற குடும்பத்தாரோ யாருக்கோ செய்த நல்லுதவியின் பிரதியாக இறைவன் கிருபை செய்வதாக உணர்கிறோம்.இந்த சங்கிலியில் இணைத்துக்கொள்வதில் தன்னிறைவை உணர்கிறோம், இன்ஷா அல்லாஹ்!(இறைவன் நாடினால்).நீங்களும் யோசிக்கத்தொடங்கிவிட்டீர்கள் தானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக