கிராமத்து மின்னல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிராமத்து மின்னல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 மே, 2009

சம்பு தோட்டத்துக்கு விசிட்...!


இந்த பசுவும் கன்றும் எங்களுக்கு பல ஆண்டுகள் பால் வார்த்த பசுக்களின் சந்ததிகள்.விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் நான் பால் வாங்கிவர செல்வேன்.நான் சென்றவுடன் பால்கறந்து நுரை ததும்ப இளஞ்சூடாக,பரிசுத்தமாக இருக்கும்.இப்போதைய வேக வாழ்க்கையில் இயற்கையை விட்டு தூர விலகிப்போனது நினைத்துப்பார்க்க இலேசு.கொடுத்து வைத்த, மீண்டும் கிடைக்க ஏங்கும் நாட்கள்.

சனி, 25 ஏப்ரல், 2009

எங்கள் குடும்பம்


நாங்கள் ஈரோடு மாவட்டம் ,பவானி வட்டம் குந்துபாயூர் கிராமத்தில் வசிக்கிறோம்.என் தந்தையார் அப்துல்லா தாவுத் அலி - ஓய்வு பெற்ற தமிழாசிரியர்.தாய் ஹாருன் -இல்லத்தரசி.


எங்கள் கிராமம் அழகிய சிற்றூர்.இஸ்லாமிய சமுதாயத்தவர் பெரும்பான்மையாக வசிக்கிறோம்.மிக அழகிய வழிபாட்டுத்தளம் (மசூதி) செம்மண் நிலப்பரப்பில் தென்னை மரங்கள் சூழ ,சுகாதரமான தென்றல் நிறைந்த வெள்ளந்தியான மக்கள் வசிக்கும் அழகிய சிற்றூர்.