கச்சிதமாக கையாள... கவனமாக சமைக்க...
இந்த 'ஃபாஸ்ட்ஃபுட்' யுகத்தில் பலருடைய கிச்சன்களில் பாஸ் மார்க் வாங்கி இடம் பிடித்துவிட்டது... 'மைக்ரோவேவ் அவன்'. 'எப்போ பார்த்தாலும் கிச்சன்குள்ளயே நிக்க வேண்டியதா இருக்கு' என்று புலம்பிய பெண்களுக்கு வரம் தந்து, நிமிடங்களில் சமையலை முடித்துக் கொடுத்து சபாஷ் வாங்குகின்றன இந்த 'மைக்ரோவேவ் அவன்'கள்.
''ஆனால், 'மைக்ரோ வேவ் அவனை உபயோகிப்பது எப்படி' என்று முழுமையாகத் தெரிந்துகொண்டு சமையல் செய்வதுதான் 'மைக்ரோ அவன்' மற்றும் உங்களுக்கும் பாதுகாப்பு'' என்று சொல்லும் சென்னை, 'டெக்னிக் ஸ்பாட் எலெக்ட்ரானிக்ஸ்' சர்வீஸ் சென்டரின் பங்குதாரர் சுரேஷ்குமார், 'மைக்ரோவேவ் அவன்' உபயோகம் மற்றும் பராமரிப்பு பற்றிய ஆலோசனைகளை உங்களுக்காக அள்ளி வைத்தார். அதையெல்லாம் கீழே அடுக்கி வைக்கிறோம்.
கதிர்வீச்சு... கைகள் கவனம்!
பொதுவாக மைக்ரோவேவ் அவன்ல் காய்கறிகள், முட்டை அவிப்பதிலிருந்து பிரியாணி, பிஸ்கட், கேக், தந்தூரி அயிட்டங்கள் வரை எல்லாம் சமைக்கலாம்.
இதில் 'மைக்ரோவேவ் கதிர்வீச்சு' மூலமாக சமையல் நடப்பதால், சமைத்த பின் உணவில் படரும் ஒரு வகை வாடை சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். எனவே, அவனில் இருந்து எடுத்த உணவை சில நிமிடங்கள் நார்மல் கேஸ் அடுப்பில் வைத்து தாளித்துக் கொட்ட, அந்த வாடை விலகிவிடும். கூடவே, இந்த மைக்ரோவேவ் அவன் கதிர்வீச்சு, உணவில் படிந்திருக்கும் என்பதால், சமைத்த உணவை மூன்று நிமிடங்கள் கழித்து உண்பது நலம்.
அதேபோல, சமைத்தபின் அவன்ஐ திறந்து உள்ளே இருக்கும் பாத்திரங்களை எடுக்கும்போது, அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு கைகளைப் பாதிக்கும் என்பதால், கிளவுஸ்கள் அணிந்து கொள்ள வேண்டும்.
'பேஸிக் மாடல்' வகையில் 17 முதல் 3 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட 'அவன்'கள் கிடைக்கின்றன. தேவைக்கேற்ப வீடு, தொழிற்சாலைகளில் உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்த ரக அவன்ஐ ரீஹீட் (மறுபடி சுடவைக்க) செய்வதற்கும் உபயோகப்படுத்தலாம். ஆனால், இந்த மாடலில் பீட்ஸா, கேக், பிஸ்கட், சிக்கன் தந்தூரி போன்ற அயிட்டங்களை செய்ய முடியாது.
பிளாஸ்டிக் ஜாக்கிரதை!
'மைக்ரோவேவ் அண்ட் கிரில்' மற்றும் 'மைக்ரோவேவ் அண்ட் கன்வென்ஷன்' மாடல்களில், 'கிரில்' வகையில் சமைக்கும்போது எல்லா விதமான மெட்டல் பாத்திரங்களையும் உபயோகிக்கலாம். ஆனால், 'கன்வென்ஷன்' வகையில் சமைக்கும்போது, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களை உபயோகித்தால் ஷாக் அடிக்கக்கூடும். பொதுவாகவே அவன் சமையலுக்கு, கண்ணாடி மற்றும் அதற்கென உரிய மைக்ரோவேவ் அவன் பாத்திரங்கள் வாங்கிப் பயன்படுத்துவதுதான் பாதுகாப்பு. பிளாஸ்டிக் பாத்திரங்கள் உபயோகித்தால், அவை அதன் வெப்பத்தில் உருகிவிடக் கூடும். எனவே, அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
'கிரில்' வகையில், தோசைக்கல் போன்ற அமைப்புடன் உள்ளே வடிவமைக்கப்பட்டிருக்கும் மேடையில் வைத்து எண்ணெய் இல்லாத கட்லெட் முதலிய உணவுகளை சமைக்கலாம். 'கன்வென்ஷன்' வகையில் கேக் பேக்கிங், தந்தூரி முதலிய உணவுகளை சமைக்கலாம். இந்த வகை அவன்ல் சில வகை ராடுகள் இருக்கும். அதில் மாசாலா தடவிய சிக்கனை செருகி வைத்துவிட, கடையில் வாங்கும் தந்தூரி சிக்கன் தோற்றுவிடும். எல்லா வகை மெஷினிலும் இந்த ராடு இருக்காது. ராடு ஆப்ஷன்கள் தேவைப்படும் விதத்தில், அதனைக் கேட்டு வாங்கலாம்.
டர்ன் டேபிளில் தண்ணீர் பட்டால் ஆபத்து!
மைக்ரோவேவ் அவன்ன் உள்ளே பாத்திரங்களை வைப்பதற்கு 'டர்ன் டேபிள்' (Turn table) என்றொரு தட்டு இருக்கும். சீராகச் சமையல் நடைபெற இந்த டேபிள் கிளாக்வைஸ் மற்றும் ஆன்டி கிளாக்வைஸ் முறையில் சுற்றும். இந்த டேபிளில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களை பயன்படுத்தும்போது, டேபிளில் தண்ணீர் பட்டுவிட்டால், உடனடியாக ஆஃப் செய்துவிட்டு உலர்ந்த துணியால் நன்கு துடைத்துவிட வேண்டும். இல்லையெனில் கீழே இருக்கும் மோட்டாரில் பட்டு, வெகு சீக்கிரத்தில் துருப்பிடிக்க ஆரம்பித்துவிடும்.
பாலை வாய் அகன்ற மைக்ரோவேவ் பாத்திரத்தில் ஊற்றி அவன்ல் வைக்க, பொங்கி வழியாது.
அவன்ன் வெளிப்புறத்தில் வெஜிடபிள் 15 கிராம், 3 கிராம், 4 கிராம் என்று அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். காய்களை பாத்திரத்தில் வைத்து கதவை அடைக்க, இந்த அளவுகள் ஸ்க்ரீனில் தெரியும். அதில் நீங்கள் வைத்த காயின் அளவை தேர்வு செய்து, ஸ்டார்ட் பட்டனை தட்ட, சமையல் ஆரம்பித்துவிடும்.
காய்கறிகளை வேக வைக்கும்போது சிறிதளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். இல்லையெனில் காய்கறிகள் சுருங்கி போய்விடக்கூடும். பொதுவாக, அரை கிலோ காய்கறிகள் பத்து முதல் பதினைந்து நிமிடங்களில் வெந்து விடும். அவன்ல் இருந்து வெளியே எடுக்கும்போது, வேகாதது போல் இருக்கும். ஆனால், சிறிது நேரத்தில் காய்கறிகள் பூப்போல வெந்திருப்பதை கவனிப்பீர்கள். பதினைந்து நிமிடங்களுக்கு மேல் வைத்தால் காய்கறிகள் கொழகொழவென்று ஆகிவிடும்.
முட்டை வேக வைக்கும்போதும் பாத்திரத்தில் முட்டை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் வைக்க வேண்டும்.
அசைவ 'அவன்',கேட்டு வாங்கவும்...
அசைவ உணவுகளை சமைக்கும் வசதி எல்லா மாடல்களிலும் இருக்காது. எனவே, தேவைப்படுபவர்கள் அதைக் கேட்டு வாங்கவேண்டும்.
மின்சாரத்தைப் பொறுத்தவரை, பொதுவாக எந்த எலெக்ட்ரானிக் சாதனத்திலும் 1 வேல்ட் உபயோகத்துக்கு 1 யூனிட் கரன்ட் செலவாகும். அவன்க்கும் அதுவே. 'பேஸிக் மாடல்'ல் 6 முதல் 8 வோல்ட் வரை கரன்ட் செலவாகும். 'கிரில்' மாடலில் 2 முதல் 25 வோல்ட்வரை கரன்ட் செலவாகும்
அவன்-ல் 'டிரான்ஸ்ஃபார்மர் டைப்', 'இன்வெர்டர் டைப்' என இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில் டிரான்ஸ்ஃபார்மர் டைப்தான் நமது நாட்டுக்கு சிறந்தது. இதில் மெஷின் லோ வோல்டேஜ்ல் சமைப்பதற்கு சற்று கூடுதல் நேரம் எடுத்தாலும், தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும். ஆனால். இன்வெர்டர் டைப்புக்கு, மின்சாரம் எப்போதும் சீராக கிடைக்க வேண்டும். லோ வோல்டேஜ்ல் பழுதாகி, நமக்கு செலவு வைத்துவிடும்.
சமைக்கும்போது டைம் செட் செய்து விட்டால், நேரம் வந்ததும் அலாரம் அடித்து நினைவுபடுத்தும்.
வாடையைத் துரத்த எலுமிச்சை டெக்னிக்!
சமையல் நடந்து கொண்டிருக்கும்போதே இடையில் கிளறிக் கொடுக்க, கதவைத் திறந்து அதற்கென இருக்கும் கரண்டி மூலம் கிளறி கொடுத்துவிட்டு, பின்பு மூடிவிடலாம். இதனால் 'டைம் செட்டிங்'ல் மாற்றம் ஏற்படாது. கதவை திறக்கும்போது 'பாஸ்' நிலைக்கு வந்து, பின் கதவை மூடியபின் ஆட்டோமேட்டிக்காக 'ஸ்டார்ட்' நிலைக்கு சென்றுவிடும்.
மைக்ரோவேவ் அவன்ல் இப்போது காபி மேக்கர் வந்துவிட்டது. அதில் பாலுடன் டிகாக்ஷன் கலந்து வைத்துவிட்டால், நிமிடத்தில் காபி ரெடி.
அசைவ உணவு சமைத்தபின் அந்த வாடையைப் போக்க, ஒரு சின்ன பவுலில் தண்ணீர் நிரப்பி, அதில் அரைத் துண்டு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்துவிட்டு மெஷினில் வைத்து, ஆன் செய்து விட வேண்டும். நான்கு நிமிடத்தில் அணைத்துவிட்டு உலர்ந்த துணியால் மெஷினை நன்கு துடைக்க, சுத்தமாவதோடு துர்நாற்றமும் போய் விடும். லேட்டஸ்ட் மாடல்களில் ஆட்டோமேட்டிக் கிளீனிங் வசதிகளும் இருக்கின்றன.
மெஷின் வாங்கும்போது சைல்ட் லாக் ஆப்ஷன் இருக்கிறதா என்று கேட்டு வாங்குவது நலம்.
வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உபயோகமான கருத்து.... மிக்க நன்றி....
பதிலளிநீக்கு