வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

''என் மகளுக்கு நான்கு வயது ஆகிறது. அவளுடைய கல்விக்கும் திருமணத்துக்கும் முதலீடு செய்ய ஆசைப்படுகிறேன். ஒரே தடவையாக முதலீடு செய்வதாக இருந்தால் எதில் செய்வது?மாதா மாதம் சேமிப்பதாக இருந்தால் என்னென்ன திட்டங்கள் உள்ளன?''
- சிவகுமார், யூ.எஸ்.ஏ.
வி.ஹரிஹரன், 'நெஸ்டோ' ஃபைனான்ஸியல் சர்வீசஸ், சென்னை.
''ஒரே தடவை முதலீடு செய்வதாக இருந்தால் அத்தொகையை இரண்டு அல்லது மூன்று திட்டங்களில் 'லார்ஜ் கேப் ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டு’களில் பிரித்து முதலீடு செய்யவும்.
மாதாமாதம் எஸ்.ஐ.பி-யில் முதலீடு செய்வதாக இருந்தால் 'லார்ஜ் கேப் ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டி’லும் 'மிட்கேப் ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டி’லும் ஸ்டாக் புரோக்கிங் மூலம் 'கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டி’லும் பிரித்து முதலீடு செய்யவேண்டும். பதின்மூன்று வருடங்களுக்குப் பிறகு உங்கள் மகளுடைய கல்விச் செலவுக்குத் தேவையான யூனிட்டுகளை விற்றுவிட்டு, எஸ்.ஐ.பி-யைத் தொடரவேண்டும். அது திருமணத்துக்குப் பயன்படும்.''

கேள்வி-பதில்
பத்திரம் போதாதா, பட்டாவும் வேண்டுமா?

''நிலப்பட்டாவின் முக்கியத்துவம் என்ன? அதை வாங்குவதற்கு ரொம்பக் கஷ்டப்பட வேண்டியுள்ளது. வருவாய்த்துறை செலவு வேறு! நிலத்துக்கான பத்திரம் பத்திரமாக நம் கையில் இருக்கும்போது நிலப் பட்டாவை வாங்காவிட்டால்தான் என்ன?''
- மு.சுப்பையா, வள்ளியூர்.
எஸ்.சி.ரகுராம், வழக்கறிஞர், சென்னை.
''நீங்கள் ஒரு நிலத்துக்கு உரிமையாளர் என்றால் அதற்கான பட்டா வைத்திருப்பது நல்லது. பட்டா உங்கள் பெயரில் இருந்தால்தான் அரசாங்கப் பதிவேடுகளில் (வருவாய்த் துறை மூலம்) நீங்கள் நிலத்தின் உரிமையாளர் என்ற விவரம் பதியப்படும். உங்கள் நிலத்தில் நீங்கள் சட்டபூர்வ சுவாதீனம் (Lawful Possession) கொண்டவர் என்பதை பட்டாதான் நிரூபிக்கும். பட்டாவின் பின்புறம் உங்கள் நிலத்தின் நீள, அகலம் மற்றும் எல்லைகள் குறிக்கப்பட்டிருக்கும். பிற்காலத்தில் சுவாதீனத்தைப் பொறுத்து ஏதேனும் பிரச்னைகளோ அல்லது வழக்குகளோ ஏற்படுமாயின் உங்கள் பெயரில் பட்டா இருப்பது உங்களுக்குச் சாதகமாக அமையும்.
பத்திரம் என்பது இரண்டு பேர் சம்பந்தப்பட்டது. அதில் உள்ள தகவல்கள் எல்லாம் அப்படியே இருக்கும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. ஆனால், பட்டா என்பது வருவாய்துறை அலுவலர்களால் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட சொத்தை சர்வேயரை வைத்து அளந்து, அவர் தரும் தகவல்களின் அடிப்படையில் தருவது. பட்டாவில் தவறுகள் நிகழ வாய்ப்பு இல்லை. பத்திரங்களில் உள்ள தகவல்கள் மாற நிறைய வாய்ப்பு இருக்கிறது. பத்திரம் என்பது தலைமுறை தலைமுறையாக எழுதி வருவது. உதாரணத்துக்கு 1955-ல் இருக்கும் பத்திரத்தில் அந்தக் காலத்தில் எழுதப்பட்டவையாக இருக்கும். ஆனால், காலமாற்றத்தில் அந்த இடத்தில் அரசு ரோடு போடுவதற்குக்கூட கொஞ்சம் இடத்தை எடுத்திருக்கலாம். அது பத்திரத்தில் தெரியாது. ஆனால், பட்டாவில் இது தெளிவாகத் தெரிந்துவிடும்.''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக