செவ்வாய், 19 மே, 2009

கவிதையாக ஒரு குறள்.

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
-'தெய்வப்புலவர்' திருவள்ளுவர்.
உறங்குகிற குழந்தையை இரசித்தல் பாவம் என்றொரு நம்பிக்கை பரவலாக இருக்கிறது.மன அழுத்தம் என்கிற பிரச்சினை வேலை,தொழில் போன்ற வெளி வாழ்க்கையில் சகலமாக எல்லோரும் எதிர்கொள்கிற ஒரு விசயம்.நமக்குப்பழக்கமான அல்லது நாம் பெற்ற குழந்தைகளை தொட்டுக்கொஞ்சுவது,யாரோ பெற்ற குழந்தை அறிமுகமில்லாமல் இல்லாமலேயே நமது கையசைப்புக்கு பதிலாக கையசைத்து புன்னகைக்கும்போது மனம் இலேசாக உணர்கிறோமே!.அந்த மழலை மொழிகளையும்,புன்முறுவல்களையும் வாழ்க்கை என்னும் வழிச்செலவுக்கு சேமித்து வைத்திருப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக