குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
-'தெய்வப்புலவர்' திருவள்ளுவர்.
உறங்குகிற குழந்தையை இரசித்தல் பாவம் என்றொரு நம்பிக்கை பரவலாக இருக்கிறது.மன அழுத்தம் என்கிற பிரச்சினை வேலை,தொழில் போன்ற வெளி வாழ்க்கையில் சகலமாக எல்லோரும் எதிர்கொள்கிற ஒரு விசயம்.நமக்குப்பழக்கமான அல்லது நாம் பெற்ற குழந்தைகளை தொட்டுக்கொஞ்சுவது,யாரோ பெற்ற குழந்தை அறிமுகமில்லாமல் இல்லாமலேயே நமது கையசைப்புக்கு பதிலாக கையசைத்து புன்னகைக்கும்போது மனம் இலேசாக உணர்கிறோமே!.அந்த மழலை மொழிகளையும்,புன்முறுவல்களையும் வாழ்க்கை என்னும் வழிச்செலவுக்கு சேமித்து வைத்திருப்போம்.
செவ்வாய், 19 மே, 2009
புதன், 13 மே, 2009
சம்பு தோட்டத்துக்கு விசிட்...!
இந்த பசுவும் கன்றும் எங்களுக்கு பல ஆண்டுகள் பால் வார்த்த பசுக்களின் சந்ததிகள்.விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் நான் பால் வாங்கிவர செல்வேன்.நான் சென்றவுடன் பால்கறந்து நுரை ததும்ப இளஞ்சூடாக,பரிசுத்தமாக இருக்கும்.இப்போதைய வேக வாழ்க்கையில் இயற்கையை விட்டு தூர விலகிப்போனது நினைத்துப்பார்க்க இலேசு.கொடுத்து வைத்த, மீண்டும் கிடைக்க ஏங்கும் நாட்கள்.
என் வகுப்பறை!
சென்ற டிசம்பர் 2008விடுப்பில் ஒலகடம் அரசு மேல்நிலைப்பள்ளி சென்றோம்.அது மாலைபொழுது.தலைமை ஆசிரியர் மற்றும் ஓய்வு பெறப்போகும் தமிழாசிரியை திருமதி.சண்முகவடிவு அவர்களையும் சந்தித்தோம்.படத்திலிருப்பது நான் எட்டாம் வகுப்பு படித்த வளாகம்.அந்த கட்டிடமே சிதிலமடைந்து காணப்பட்டது.
பள்ளியின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் பட்டியலில் எங்கள் கிராமத்து மாணவனின் பெயரைக்கண்டபோது பெருமையாக இருந்தது.ஆக்கபூர்வமாக பள்ளிக்கு நற்செயல் புரிய தலைமை ஆசிரியர் கேட்டுக்கொண்டார்.இறைவன் நாடினால்!
பள்ளியில் படித்து நல்லநிலையில் இருக்கும் பலரையும் ஒருங்கிணைக்க வேண்டும்.எங்களையெல்லாம் மேலேற்றிவிட்ட,தற்போது ஒய்வுபெற்ற ஆசிரியர்களை கௌரவிக்கவேண்டும்.

எங்கள் ஊரு செம்மண் பூமி...!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)